கமல், ரஜினி யார் கட்சிக்கு ஆதரவு: சந்தானம்

  • IndiaGlitz, [Monday,December 25 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருமே வரும் ஜனவரியில் தங்கள் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் இருபெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் கட்சி ஆரம்பித்தால் கோலிவுட் திரையுலகினர் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் 'சக்க போடு போடு ராஜா' செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சந்தானம், 'முதலில் கமல், ரஜினி இருவரும் அரசியலுக்கு வரட்டும். வந்த பின்னர் அவர்களுடைய கொள்கைகள் என்ன? மக்களுக்கு என்னென்ன செய்வார்கள்? என்று சொல்லட்டும் அதன் பின்னர் யாருக்கு ஆதரவு தருவது என்பது குறித்து முடிவு செய்வேன்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். தாராளமாக நடிகர்களும் அரசியல் செய்யலாம். ஆனால் எனக்கு இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை' என்று கூறினார்.

More News

சிவகார்த்திகேயன் படத்துடன் போட்டியா? சந்தானம் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' மற்றும் சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் 'பலூன் இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட

விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

சக்கை போடு போட்டதா சந்தானம் படத்தின் வசூல்?

'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் காரணமாக திருப்திகரமான வசூலையே பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பெற்ற அபார ஓப்பனிங் வசூல்

சிவகார்த்திகேயன், அஜித்-விஜய்க்கு அடுத்த இடத்தை நெருங்கிவிட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வேலைக்காரன்' படத்தின் வசூல் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது