கோவில்கள் குறித்து சத்குருவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் கருத்து!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

இந்துக் கோயில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் இந்த கோவில்கள் அனைத்தையும் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சத்குரு கூறிய கருத்து கூறிய கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக சத்குரு ஒரு ட்வீட்டை பதிவு செய்து அந்த ட்வீட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்களுக்கு டேக் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது ’300 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனி நாம் கோவில்களை கட்டுப்பாட்டில் எடுத்து வைத்துக் கொண்டது பக்தியினாலும் அல்லது ஆன்மீக ஆர்வத்தினாலும் இல்லை என்றும், கோவில்களில் உள்ள சொத்தை கொள்ளை அடிப்பதற்காகவே கட்டுப்பாட்டில் எடுத்தனர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆன பிறகும் அதே நிலை நீடிப்பது மிகுந்த மனம் வேதனை கொள்கிறது என்றும், இந்துக் கோயில்கள் அனைத்தையும் பக்தர்களிடம் ஒப்படைத்தால் பக்தர்கள் கோவில்களை சரியான அளவில் பராமரிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களும் அரசாங்கத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

சத்குருவின் இந்த கருத்துக்கு நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். கோவில்களை தயவுசெய்து பக்தர்கள் இடமே விட்டுவிடுங்கள். பல கோவில்களில் ஒரு கால பூஜை கூட செய்வதில்லை என்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. பராமரிப்பு பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பக்தர்களே செய்து கொள்வார்கள்’ என்று நடிகர் சந்தானம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் சந்தானத்தின் இந்த டுவி தற்போது வைரல் ஆகிவருகிறது.