இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்
- IndiaGlitz, [Thursday,March 01 2018]
சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜை விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி தீப்தி நடிக்கவுளார்.
இதுகுறித்து சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: மிண்டும் ஒருமுறை பிளாக்பஸ்டர் குழுவுடன் இணைவது சந்தோஷம். இன்று முதல் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசியுடன் இந்த படத்தையும் வெற்றிப்படமாக கொடுப்போம் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.