ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தரத்தயார். பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்ய கோரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர். மெரீனா முழுவதும் மனித தலைகளாக இருப்பதை பார்க்கும்போது இது ஒரு மனித சுனாமி போல உள்ளது.
அதே நேரத்தில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு பொதுமக்களும், வணிகர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உணவு, தண்ணீர், மருந்து பொருட்கள் ஆகியவற்றை கொடுத்து உதவி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராடும் இளைஞர்களுக்காக கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் வழங்கி வருகிறார். மேலும் போராட்டம் முடியும் வரை தான் உதவி செய்ய உள்ளதாகவும், இதற்காக 1லட்சமோ, 10லட்சமோ, அல்லது 1 கோடி ரூபாயோ செலவு செய்ய தயார் என்றும், வங்கி மேனேஜருடன் கலந்து பேசி நாளை பணத்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் அவர்களின் உதவிக்கு நன்றி என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com