சேஷுவுக்கு சந்தானம் உதவி செய்யவில்லையா? அவரே அளித்த விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் காமெடி நடிகர் சேஷு காலமான நிலையில் அவரது சிகிச்சைக்கு சந்தானம் உதவி செய்யவில்லை என்று பொதுவாக செய்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு சந்தானம் ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது விளக்கம் அளித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் உருவான ’இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 10ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த போது பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதில் அளித்தார்.
’இங்க நான் தான் கிங்கு’ என்ற டைட்டில் வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் அரசியலுக்கு வந்து ராஜாவாக போகிறீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ’இது அரசியலுக்காகவோ அல்லது என்னை நான் ஹீரோ என்று காண்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கவில்லை. இந்த படத்தின் கதைப்படி இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவு செய்ததால் வைக்கப்பட்டது தான், வேறு எதுவும் இல்லை என்று கூறினார்
மேலும் இந்த படத்தில் நடித்த சேஷு உடல்நலக்குறைவால் காலமான போது சந்தானம் அவருக்கு உதவி செய்யவில்லை என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் தற்போது இதே படத்தில் நடித்த அந்தோணி ராஜ் என்பவர் மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய சிகிச்சைக்கு பணம் முழுவதும் சந்தானம் தான் செலவு செய்வதாக தகவல் வெளியாகிறது. நீங்கள் பல உதவிகள் செய்தும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லையே என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
இந்த கேள்விக்கு பதில் கூறிய சந்தானம், ’எல்லோருமே என்னை பாராட்டிவிட்டால் நான் கடவுளாக மாறிவிடுவேனே, எல்லாருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சிலர் தப்பாக பேசத்தான் செய்வார்கள், அவர்களை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை’ என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments