அனிதாவுக்கு நடிகர் சந்தானம் இரங்கல் செய்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
மருத்துவ கனவுகளுடன் வாழ்ந்த அனிதா, உயிரற்ற பிணமாகி நேற்று சாம்பலும் ஆகிவிட்டார். ஆனாலும் அவருக்கான இரங்கல்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு கொண்டே வருகிறது. குறிப்பாக கோலிவுட் திரையுலகினர் பலர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்ய தவறவில்லை. இந்த நிலையில் நடிகர் சந்தானம் தன்னுடைய இரங்கல் செய்தியை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
சகோதர் அனிதாவின் மரணம் எனக்கு மிகுந்த மன வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய நான் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரி, மாணவ, மாணவிகளுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடித்தால் வாழ்க்கையில் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறலாம், அனைவரும் நினைத்த இலக்கை அடையலாம், டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்களை நினைவில் கொண்டு, உங்களது வேகத்தை செயலிலும், நிதானத்தை தீர்க்கமான முடிவிலும் காட்டுங்கள், தாய் தந்தையரை நினைத்து, அவசர முடிவினை தவிர்த்திடுங்கள்.
#RIPAnitha pic.twitter.com/RCoIJXdgrm
— Santhanam (@iamsanthanam) September 2, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments