ஒரே வருடத்தில் ஆறு படங்களை ரிலீஸ் செய்யும் சந்தானம்?
- IndiaGlitz, [Tuesday,March 10 2020]
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம் ஒரே வருடத்தில் 10 முதல் 15 படங்களுக்கு மேல் நடித்து வந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் நடித்த படங்கள் ரிலீசாகி வந்தன என்ற நிலையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.
ஆனால் அவர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் சந்தானம் நடித்த 6 படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்த ’சர்வர் சுந்தரம்’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதிலும் இந்த படங்கள் பிரச்சனையில் சிக்கி தவித்து வருவதாக கூறப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டு விரைவில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபோக சந்தானம் தற்போது ’டிக்கிலோனா’ ’ஓடி ஓடி உழைக்கணும்’’தில்லுக்கு துட்டு 3’ மற்றும் ‘பிஸ்கோத்’ ஆகிய நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நான்கு படங்களும் இவ்வருடத்திற்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த ஆண்டு சந்தானம் நடித்த 6 திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் அதிக படங்களில் நடித்து அதிக படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்தவகையில் சந்தானமும் இந்த ஆண்டு அதிக படங்களை ரிலீஸ் செய்யும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.