close
Choose your channels

சந்தானம் படத்தை இயக்கும் மணிரத்னம் உதவியாளர்

Saturday, December 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்தின் வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களாக நடித்து வரும் நிலையில் தற்போது லொள்ளுசபா ராம்பாலா இயக்கத்தில் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு படத்தில் நடிக்க சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மணிரத்னம் இயக்கிய 'ஆயுத எழுத்து' படத்தில் உதவியாளராகவும், 'திருடன் போலீஸ்' மற்றும் 'ஒருநாள் கூத்து' போன்ற படங்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் பால்கி இயக்கவுள்ள புதிய படத்தில்தான் சந்தானம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் தயாரிக்கவுள்ளார்.

இதுவரை பார்க்காத சந்தானத்தை இந்த படத்தில் பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த படம் சந்தானத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தயாரிப்பாளர் செல்வகுமார் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், அந்த கேரக்டருக்குரிய நடிகர் மற்றும் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய் 60' ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment