சந்தானத்துடன் இணையும் பிரபல வெற்றி பட இயக்குனர்

  • IndiaGlitz, [Tuesday,August 02 2016]

ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் 'எந்திரன்' என்ற மிகப்பெரிய சுனாமியை சமாளித்து வசூலை அள்ளிய படம். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வாசன் விஷுவல்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை மற்றும் ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கவுள்ள நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்' என்ற படத்தில் நடித்து வருகிறா.ர் இந்த படத்தை முடித்தவுடன் அவர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து சந்தானம், மணிகண்டன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சுந்தர் சியின் மெகா பட்ஜெட் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமான 'சங்கமித்ரா' திரைப்படம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படவுள்ளது...

ஹன்சிகாவை அடுத்து சி.வி.குமாருடன் இணைந்த சூர்யா

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார்...

மலேசியாவில் 'கபாலி' செய்த முதல் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது...

மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட சூர்யா-கவுதம் மேனன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த 'காக்க காக்க 'திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு...

தீபாவளிக்கு வெளிவருகிறது 'மகிழ்ச்சி' மற்றும் 'நெருப்புடா'

தமிழ் வார்த்தைகளான மகிழ்ச்சி மற்றும் நெருப்பு ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உச்சரிக்காமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை...