close
Choose your channels

மீண்டும் இணையும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி

Wednesday, February 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ராஜேஷின் முதல் படமான 'சிவா மனசில சக்தி' படம் முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் நடித்தவர் சந்தானம். தற்போது சந்தானம் ஹீரோவாக புரமோஷன் பெற்றுவிட்டதால் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தில் அவர் நடிக்கவில்லை
இந்நிலையில் மீண்டும் ராஜேஷ்-சந்தானம் இணையவுள்ளனர். ஆனால் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் ராஜேஷ் கூறிய கதை ஒன்று சந்தானத்தை கவர்ந்துவிட்டதால் இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்', 'ஓடி ஓடி உழைக்கணும்', சக்க போடு போடு ராஜா', மற்றும் 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment