பிரேக் இல்லாமல் நடந்த படப்பிடிப்பு.. சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அதற்குள் முடிந்துவிட்டதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த சந்தானம் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை ’கிக்’ மற்றும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 63 நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
சீன் ரோல்டன் இசையில் உருவாகிய இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் கடந்த 1960 ஆம் ஆண்டில் நடைபெறும் காலத்திய கதை என்றும் கூறப்படுகிறது. சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Thanks almighty and everyone who worked hard for making this possible..
— Karthik Yogi (@karthikyogitw) April 3, 2023
And that's a wrap!
After 63 days of tireless work, we've completed the shoot of #VadakkupattiRamasamy
Post-production in progress. Next updates coming soon!
Starring @iamsanthanam @akash_megha
A… pic.twitter.com/Nw4VUxR7q6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com