சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்-ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,June 06 2019]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாகிய நடிகர் சந்தானம், ஹீரோவாகவும் வெற்றி பெற்று முன்னேறி வருகிறார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் ஒரு படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடித்து வரும் புதிய படத்திற்கு 'டகால்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சிகரெட்டை ஸ்டைலாக பற்ற வைக்கும் சந்தானத்தின் ஸ்டில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இடம்பெற்றுள்ளது. விஜய் ஆனந்த் இயக்கி வரும் இந்த படத்திற்கு விஜய் நரேன் என்பவர் இசையமைத்து வருகிறார். தீபக்குமார் ஒளிப்பதிவில், சுரேஷ் படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ரித்திகா சென் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்தானம் தற்போது 'A1', என்ற படத்திலும் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள 'சர்வர் சுந்தரம்', 'மன்னவன் வந்தானடி' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

சிம்புவின் 'மாநாட்டில்' இணைந்த பிரபல இசையமைப்பாளர்

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் மலேசியாவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது

பேட்மிண்டன் வீராங்கனையை காதலிப்பது உண்மையா? விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் எடுத்த இரண்டு செல்பி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

4 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்! மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம்!

டெல்லியில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து வந்தார்.

ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர்

திருமண வயதான பல இளைஞர்களுக்கு ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்யவே போதும் போதுமென்று ஆகிவிடும் நிலையில்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: விரக்தியால் திருப்பூர் மாணவி தற்கொலை

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்