சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்.. டைட்டில் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Friday,April 14 2023]
நடிகர் சந்தானம் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது அவர் ‘கிக்’ மற்றும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடித்த ஒரு சில படங்களை இயக்கிய ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இந்த படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக சுரபி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’நான் வேற மாதிரி’, ’வேலையில்லா பட்டதாரி’ உட்பட சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். தீபக் குமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்திற்கு ஆஃப்ரோ என்பவர் இசையமைக்க உள்ளார். இது ஒரு திகில் மற்றும் காமெடி கதை அம்சம் கொண்ட படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.