close
Choose your channels

'கிக்' ரிலீஸ் ஆனதை அடுத்து சந்தானம் அடுத்த படத்தின் பிசினஸ் ஆரம்பம்.. முதல் போனியே முரட்டு போனி..!

Friday, September 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’கிக்’ என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவர் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பிசினஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவான ’டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

சீன் ரோல்டான் இசையில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ஆச்சரியத்தக்க சில அப்டேட்களையும் விரைவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தின் உரிமையை வாங்கியதை அடுத்து முதல் போனியே முரட்டு போனி என்று திரை உலகினர் கூறி வருகின்றனர்

முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படம் கடந்த 1960 ஆம் ஆண்டில் நடைபெறும் காலத்திய கதை என்றும் கூறப்படுகிறது. சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment