சந்தானம் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: குலுங்க குலுங்க சிரிக்க ரெடியா இருங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக ’ஏஜண்ட் கண்ணாயிரம்’ ‘குலுகுலு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் ‘குலுகுலு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என படக்குழுவினர் அறிவித்தனர்.
சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கே பாக்யராஜ், மனோபாலா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘குலுகுலு’ திரைப்படம் ஜூலை 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.
‘குலுகுலு’ திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டது என்பதால் இந்த திரைப்படத்தை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்க தயாராக இருங்கள் என ரசிகர்களுக்கு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#GuluGulu from July 29th , get ready for a fun and frolic entertainer. Something new in my career, see you all in theaters ??#GuluGulufromJuly29
— Santhanam (@iamsanthanam) July 8, 2022
@circleboxE @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @SonyMusicSouth @Kirubakaran_AKR @proyuvraaj pic.twitter.com/PXvb5RySEF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments