close
Choose your channels

ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Friday, August 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரே மாத இடைவெளியில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படம் தான் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘கிக்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரானது என்பதும் சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படமும் சந்தானத்திற்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ’கிக்’ படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment