ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகும் சந்தானம் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஒரே மாத இடைவெளியில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படம் தான் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘கிக்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரானது என்பதும் சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படமும் சந்தானத்திற்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ’கிக்’ படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது சிபிராஜின் 'மாயோன்'.. உற்சாகமான அனுபவம்..!

சிபிராஜ் நடித்த 'மாயோன்' திரைப்படம் உங்களைக் கவர்ந்த டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது. உற்சாகமான அனுபவத்திற்கு தயாராகுங்கள்.!

'சந்திரமுகி 2' ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்.. இன்று மாலை கொண்டாட்டம்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'ஜெயிலர்' வெற்றி பாதிப்பின்றி துறவி நிலையில் ரிஷிகேஷில் ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் மட்டும் இந்த படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதையும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து

கமல்ஹாசனின் 'தசாவதாரம்' பட நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை.. சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'தசாவதாரம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும்