சந்தானம் அடுத்த படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

நடிகர் சந்தானம் நடித்த ’கிக்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கிக்’ படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் இந்த படம் இந்த ரன்னிங் டைம் 134 நிமிடங்கள் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ’கிக்’ படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர்

அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

'ஜெயிலர்' படத்தின் 'காவாலா' பாடல்.. தமன்னாவின் செம்ம கிளாமர் டான்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும்

'மாமன்னன்' படக்குழு எடுத்த சூப்பர் முடிவு.. எகிற போகும் வசூல்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

டிவிட்டருக்கு மாற்றாக அறிமுகமான 'த்ரெட்ஸ்'… புதிய அம்சங்கள் என்னென்ன?

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்துவரும் டிவிட்டர் சமீபகாலகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில் அதற்கு மாற்றாக தற்போது Treads செயலி அறிமுகமாகி இருக்கிறது.

ஓடும் ரயிலில் படப்பிடிப்பு.. பதைபதைக்கும் காட்சிகள்: 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் மேக்கிங் வீடியோ..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் வீட்ல விசேஷம்.. வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..!

தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கேவி ஆனந்த் மகள் திருமணம் இன்று நடந்ததை அடுத்து திரை உலக பிரபலங்கள் பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்