ஓடிடியில் சந்தானம் நடித்த அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் ’டிக்கிலோனா’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 10ஆம்தேதி ஜீ5 ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் ’பேர் வச்சாலும் வைக்காம’ என்ற கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தின் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Are you ready to play the game of #Dikkiloona?
— KJR Studios (@kjr_studios) August 18, 2021
Premiering on @ZEE5Tamil from the 10th of September ⏲️ Get ready for time travel, chaos and bayangara looty!@iamsanthanam @thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin pic.twitter.com/HQamPti3Hi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments