சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், ஹீரோவாக புரமோஷனான நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு 2' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் சந்தானம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்தசில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த தகவலை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
சந்தானம் ஹீரோவாக நடித்த 'மன்னவன் வந்தானடி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் தற்போது 'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Am so excited to share the first look of my next film with you all. #SanthanamNext first look out today at 5pm ??
— Santhanam (@iamsanthanam) March 2, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments