பல வருட நெருங்கிய நண்பருக்கு இயக்குனர் வாய்ப்பு தரும் சந்தானம்.. யார் அந்த நண்பர்..!

  • IndiaGlitz, [Tuesday,April 18 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் தற்போது ’கிக்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மற்றும் ’டிடி ரிட்டன்ஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சந்தானம் பல படங்களில் தனது நண்பர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் என்பதும் குறிப்பாக லொள்ளு சபா நிகழ்ச்சியின் போது அவருடன் பணிபுரிந்த பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நண்பருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ’’காதல்’ என்ற படத்தில் பரத் நண்பராக நடித்தவர் சுகுமார். இவர் ’காதல் சுகுமார்’ என்று தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இன்றி ‘திருட்டு விசிடி’ ’சும்மாவே ஆடுவோம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட நாள் நண்பரான காதல் சுகுமார் இயக்கத்தில் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘காதல்’ சுகுமார் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் சந்தானத்துடன் அவர் இணையும் படம் நிச்சயம் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கோவையை அடுத்து தலைநகருக்கு பறந்த 'பொன்னியின் செல்வன்' டீம்.. மாஸ் புகைப்படம்..!

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

டிடியுடன் இருக்கும் இந்த நபர் யார்? வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவி டிடி சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் டிடியுடன் இருக்கும் நபர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது

ஜாக்குலின் வேற லெவல் வீடியோ.. கமெண்ட்ல இப்படி கேட்காதீங்க..!

விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, 'இப்படியெல்லாம் கமெண்டில் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு,  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ! 

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும்,  இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம்,  தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸை

ரக்சிதாவை அடுத்து புத்தம் புது கார் வாங்கிய 'பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா, தமிழ் புத்தாண்டு தினத்தில் புத்தம் புதிய கார் வாங்கினார் என்பதும், அப்போது அவரது நெருங்கிய தோழி ஷிவின்