பல வருட நெருங்கிய நண்பருக்கு இயக்குனர் வாய்ப்பு தரும் சந்தானம்.. யார் அந்த நண்பர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் தற்போது ’கிக்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ மற்றும் ’டிடி ரிட்டன்ஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சந்தானம் பல படங்களில் தனது நண்பர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார் என்பதும் குறிப்பாக லொள்ளு சபா நிகழ்ச்சியின் போது அவருடன் பணிபுரிந்த பலருக்கு வாய்ப்பளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நண்பருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை தர உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான ’’காதல்’ என்ற படத்தில் பரத் நண்பராக நடித்தவர் சுகுமார். இவர் ’காதல் சுகுமார்’ என்று தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இன்றி ‘திருட்டு விசிடி’ ’சும்மாவே ஆடுவோம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீண்ட நாள் நண்பரான காதல் சுகுமார் இயக்கத்தில் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ‘காதல்’ சுகுமார் இயக்கிய இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் சந்தானத்துடன் அவர் இணையும் படம் நிச்சயம் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout