ஆக்சன் ஹீரோ என்பதை சந்தானம் நிரூபித்துவிட்டார். ஆர்யா

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

சந்தானம் ஹீரோவாக நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், இசையமைப்பாளர் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ஆர்யா பேசியபோது, 'சந்தானம் காமெடி நடிகராக இருக்கும்போதே அவர் ஒரு இயல்பான நடிகர். அவருடன் நடிக்கும்போது எங்களுக்கே கஷ்டமாக இருக்கும். இப்போது ஆக்சன் ஹீரோவாக மாறிவிட்டார். சந்தானம் ஆக்சன் ஹீரோவா இல்லையா என்பது குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் சமீபத்தில் தான் அவர் ஒரு ரியல் ஆக்சன் செய்துள்ளார். அடிகொடுத்த சந்தானத்திற்கே கையில் கட்டு என்றால் அடி வாங்கியவர் நிலைமையை நினைத்தால் கஷ்டமாக உள்ளது' என்று ஆர்யா பேசினார். ஆக்சன் ஹீரோவாக நடிப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும் என்றும் அந்த துணிச்சலுடன் சந்தானம் நடித்துள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவதாகவும் ஆர்யா மேலும் கூறினார்

சந்தானம், வைபவி, விவேக், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சேதுராமன் இயக்கி வருகிறார். விடிவி புரடொக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பிக்பாஸ் ஜூலிக்கு இயக்குனர் சமுத்திரக்கனியின் முக்கிய அறிவுரை

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ஆரவ், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருசிலர் உச்சகட்ட புகழையும், ஒருசிலர் இருக்கும் புகழை இழந்தும் உள்ளனர்.

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

தியேட்டர்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், படம் பார்க்க வருபவர்களின் செலவுகளை குறைக்கவும் நேற்று விஷால் சில கருத்துக்களை தெரிவித்தார். 

உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் தயாரிப்பாளர், விஷால் இயக்குனர்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்து முடித்துள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தாலும் புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற கட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

காயத்ரி என்னை குழந்தை மாதிரி பார்த்து கொண்டார்: ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெற்றியாளரான ஓவியாவுக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து கொண்டே இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஓவியாவின் கேரக்டர் கோடியில் ஒருவருக்கே இருக்கும் என்பதை