ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சந்தானம் படங்கள்: ஒரு ஆச்சரிய தகவல்
- IndiaGlitz, [Saturday,January 11 2020]
தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’தில்லுக்குதுட்டு 2’ மற்றும் ’ஏ1’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என்று நேற்று செய்தி வெளியானதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் சந்தானம் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சந்தானம் நடிப்பில் பல ஆண்டுகளாக ரிலீசாகாமல் கிடப்பில் இருந்த ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படமும் அதே ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் கூட ஒரே நாளில் தாங்கள் நடித்த இரண்டு படங்களை வெளியிட தயங்குவது உண்டு. ஒரு சிறிய இடைவெளியில் தான் வெளியிடுவார்கள். இந்த நிலையில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ மற்றும் ’டகால்டி’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏதாவது ஒரு படம் பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.