இந்த விளையாட்டுல என்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது: 'சபாபதி' டிரைலர்

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

சந்தானம் நடித்த ’சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் பல சுவாரசியமான காட்சிகள் இருப்பதை அடுத்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்த ட்ரெய்லர் தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விதி அனைத்திலும் வலியது என்றும் அந்த விதி சபாபதியை பிடித்து ஆட்டுவிக்கும் கதைதான் இந்த படத்தின் கதை என்றும் டிரைலரில் இருந்து தெரியவருகிறது. அரசியல் பிரமுகர் ஒருவரின் கோடிக்கணக்கான பணம் உள்ள பெட்டி தற்செயலாக அப்பாவியான சபாபதி கையில் கிடைக்கிறது. அதன்பின் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், திருப்பங்கள் என்னென்ன? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை ஜாலியாக சொல்லப்பட்டு உள்ளது என தெரிகிறது.

சீனிவாசராவ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் சந்தானம் மற்றும் ப்ரீத்தி வர்மா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் சந்தானத்திற்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.