உதயநிதியின் அரசியலுக்கு உதவ போகிறேனா? சந்தானம் விளக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,February 09 2021]

சந்தானம் நடித்த ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தின் பிரஸ்மீட் இன்று நடந்த நிலையில் இந்த பிரஸ்மீட்டில் சந்தானத்திடம் கேட்கப்பட்ட சுவராஸ்யமான கேள்விகளுக்கு அவரும் சுவராஸ்யமான பதில்களை அளித்தார்

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ’உதயநிதி நடித்த பல படங்களுக்கு நீங்கள் காமெடி நடிகராக நடித்து அந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள். அதேபோல் தற்போது அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அரசியலிலும் அவருக்கு உதவி செய்வீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்

இந்த கேள்விக்கு பதிலளித்த சந்தானம் ’ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தால் யோசிக்கலாம்’ என்று காமெடியாக கூறிவிட்டு ’நாம் பார்க்கும் வேலையை ஒழுங்காக பார்த்தாலே போதும் என்று நினைப்பவன் நான். எனவே இப்போதைக்கு நான் சினிமாவை தவிர வேறு எதிலும் ஈடுபட வாய்ப்பு இல்லை’ என்று கூறினார். ‘உதயநிதி படத்தில் நடிக்கும் போது அந்த படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த நடிப்பை வெளிப்படுத்தினேன். அதேபோல் தொடர்ந்து நடிப்பில் இருப்பதற்கே நான் விரும்புகிறேன். இப்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’ என்று கூறினார்.

More News

மனைவியுடன் ஜாலியாக திருமண நாளை கொண்டாடிய ரியோ: வைரல் புகைப்படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய ரியோ, இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஐவரில் ஒருவராக இருந்தார் என்பது தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர்

சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த கீர்த்திசுரேஷ்: என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி… இந்தியா படுதோல்வி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

தனுஷின் 'கர்ணன்' பட சூப்பர் அப்டேட்டை தந்த கலைப்பு தாணு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

பயிற்கடன் தள்ளுப்படிக்கான ரசீது 10-15 நாட்களில் வழங்கப்படும்- தமிழக முதல்வர் விளக்கம்!

விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.