'சுத்தி கோமாளிகளை வச்சுகிட்டா முட்டாள் கூட அறிவாளி மாதிரி தான் தெரிவான்”: 'குலுகுலு' டிரைலர்

  • IndiaGlitz, [Wednesday,July 13 2022]

சந்தானம் நடித்த ‘குலுகுலு’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகள் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானம் உண்மையாகவே அதிரடி ஆக்சன் கேரக்டரில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் சந்தானத்தின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 'சுத்தி கோமாளிகளை வச்சுகிட்டா முட்டாள் கூட அறிவாளி மாதிரி தான் தெரிவான்” உள்பட ஒருசில வசனங்கள் இந்த டிரைலரில் இடம்பெற்று படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சந்தானம், அதுல்யா, நமீதா, பிரதீப், லொள்ளு சபா சேஷு, மகாநதி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.