டிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று ’டிக்கிலோனா’. இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களில் வெளியான இரண்டு போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நேற்று வெளியான கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் சந்தானம் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்
இந்த நிலையில் ’டிக்கிலோனா’ படத்தின் மூன்றாவது போஸ்டர் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஸ்டைலாக சந்தானமும் அவர் அருகில் யோகிபாபுவும் நிற்கும் வகையில் உள்ளது. இந்த போஸ்டர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்
சந்தானம் ஜோடியாக அனஹா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார் என்பதும் இதுதான் அவர் நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
Here is the third look of my next #Dikkiloona
— Santhanam (@iamsanthanam) May 29, 2020
Hope u guys loved it all ????????#DikkiloonaFirstLooks Look No .3 #DikkiloonaGameStart
@thisisysr @karthikyogitw @kjr_studios @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @twitavvi @Arunrajakamaraj @proyuvraaj pic.twitter.com/Ix8eB11n5j
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com