பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, துணிஞ்சவனுக்கு ஒரு நாள் தான் சாவு: சந்தானம் நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ’தில்லுக்கு துட்டு 2’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த தொடரின் அடுத்த படம் ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டிலில் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.

முந்தைய இரண்டு பாகங்கள் போலவே இந்த படத்திலும் காமெடி மற்றும் திரில் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மர்மமான பங்களாவில் கேம் ஒன்று விளையாடப்படுகிறது. அதில் மாட்டிக்கொள்ளும் சந்தானம் மற்றும் குழுவினர் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.