அதிவேக 100 மில்லியன் பார்வை.. ZEE5 தளத்தில் “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை !
Send us your feedback to audioarticles@vaarta.com
ZEE5 தளத்தில் அதிவேக 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் சாதனை செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து, சாதனை படைத்துள்ளது.
ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலக்கலான காமெடி படமாக வெளிவந்த திரைப்படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது.
நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவு தீபக் குமார் மற்றும் படத்தொகுப்பு என் பி ஶ்ரீகாந்த் கையாண்டுள்ளனர். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெகு நாட்களுக்கு ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து மகிழும் படி சரவெடி காமெடியுடன் கலக்கலான நகைச்சுவையுடன் இப்படம் உருவாகியிருந்தது.
திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படம் தற்போது ZEE5 தளத்திலும் பல சாதனைகள் படைத்து வருகிறது. இதுவரை ZEE5 தளத்தில் வெளியான படங்களில் அதி வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்கள் கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது. குடும்ப ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் மேலும் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“டிடி ரிட்டர்ன்ஸ்” 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததை கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் “டிடி ரிட்டர்ன்ஸ்” படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ZEE5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பொது மக்களுக்கு 100 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெரினா மால் வரும் பொதுமக்கள் குடும்பத்துடன், புதுமையான இந்த ஸ்கேரி ரூமை, பார்வையிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்
எண்ணற்ற வெற்றி படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களை ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. ZEE5 உடன் இணைந்திருங்கள் உங்கள் பொழுதுபோக்கை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments