சந்தானம் படத்திற்காக இணைந்த மூன்று இசையமைப்பாளர்கள்

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் 'ஏ1' ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று டகால்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. விஜய் நரேன் கம்போஸ் செய்த இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மொத்தத்தில் இந்த பாடலுக்காக மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக சந்தானம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று மும்பையில் வாழும் தமிழ்ப்பையன் வேடம். சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.