close
Choose your channels

சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்': படக்குழுவினர் வெளியிட்ட 2 நிமிட செம வீடியோ!

Sunday, October 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஏஜென்ட் கண்ணாயிரம்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் 2 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மேக்கிங் வீடியோவில் சந்தானம் நடித்த அதிரடி ஆக்சன் காட்சிகள், காமெடி காட்சிகள் ஆகியவை உள்ளன.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைபடத்தை மனோஜ் பிதா என்பவர் இயக்கி வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சந்தானம் ‘கிக்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் மற்றும் முக்கிய கேரக்டர்களில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கி வருகிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment