லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் காதல்: 'A 1' டீசர்

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த அடுத்த திரைப்படம் 'A 1'. இந்த திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது

சன் டிவியின் விளம்பர அறிவிப்பை போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரில் இருந்து லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் ஏற்படும் காதல், இந்த காதலால் இருவீட்டார்கள் தரும் பிரச்சனைதான் கதையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. காதலுக்காக அக்ரஹாரத்து பெண் ஆம்லெட் சாப்பிடுவது, அதே காதலுக்காக தன்னுடைய வீட்டை பகைத்து கொள்வது என்ற கதையில் சில ஆக்சன் காட்சிகளும் உள்ளன. நடிகர் சாய்குமார் போலீஸ் கேரக்டரில் ஆக்சன் நடிப்பை தந்துள்ளார்

வழக்கம்போல் சந்தானம் பஞ்ச் டயலாக்குடன் கூடிய காமெடி நடிப்பை தந்துள்ளார். 'கறிக்கொழம்புல எலும்பு, உன் கதையே வேணாம் கிளம்பு' என்ற வசனம் ஒரு சான்று.

காதல், காமெடி, ஆக்சன் என ஒரு ஜனரஞ்சக கமர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானம், தாரா அலிஷா, மொட்ட ராஜேந்திரன், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

சூர்யாவின் 'காப்பான்' இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் 'காப்பான்'.

விமல் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகர் விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நீ லூசா? லூசு மாதிரி நடிக்கிறியா? மீராவை வெளுத்து வாங்கிய சாக்சி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன் உடம்பு முழுவதும் நயவஞ்சகத்தால் உருவாக்கியது போல் நடந்து கொள்கிறார். சில நிமிடங்களுக்கு முன் பேசியதை பேசவே இல்லை

'இந்தியன் 2' படத்தில் இணையும் இரண்டு இளம் நடிகைகள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2

எல்லாரும் பின்னாடிதான் பேசுறாங்க: மோகனுடன் மோதிய சாக்சி

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு நட்சத்திர சிறை போன்ற இடத்தில் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் அவர்களின் பேச்சு பெரும்பாலும்