'நான் இல்லாதபோது என் ஆளு மேல கையை வச்சியாமே.. எங்க இப்ப அடி.. சந்தானம் நடித்த 'கிக்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான ‘கிக்’ வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சந்தானத்தின் வழக்கமான காமெடி மற்றும் ஆக்சன், ரொமான்ஸ் ஆகியவை கலந்த இந்த படம் நிச்சயம் சந்தானத்தின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்திருக்கும் இந்த படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கி உள்ளார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், கோவை சரளா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் உள்ள காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருப்பதால் நிச்சயம் இந்த படம் காமெடி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready for another uproarious comedy roller coaster from Santhanam! The highly anticipated #Kick 🤞 teaser has been released. Catch it in theaters on September 1st. 🎢🤣 #SanthanamComedyMadness#KickFromSep1 @iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @ArjunJanyaMusic pic.twitter.com/keW34iopTn
— Fortune films (@Fortune_films) August 17, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments