சகலகலா வல்லவனாகும் சந்தானம்: ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிஸ்கோத்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சந்தனம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன்னர் சந்தானம் நடித்துள்ள 3 கேரக்டர்களின் ஸ்டில்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஒன்று ’சகலகலா வல்லவன்’ படத்தில் கமலஹாசன் நடித்த கேரக்டரின் கெட்டப் போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிஸ்கட் கம்பெனி வைத்திருக்கும் ஒருவர் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்து வருகிறார். அவருக்கு இது 400 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது
சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பல்லா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ராதன் இசையமைத்து வருகிறார். இவர் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout