நடிகர் சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் சந்தானம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் மற்றும் பாஜக பிரமுகருமான பிரேம் ஆனந்த்தை சந்தானம் தாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சந்தானம் எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சந்தானம் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் சந்தானம் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் சந்தானம் நடித்து வரும் "சக்க போடு போடு ராஜா' டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments