நடிகர் சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

பிரபல நடிகர் சந்தானம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கும் நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் மற்றும் பாஜக பிரமுகருமான பிரேம் ஆனந்த்தை சந்தானம் தாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சந்தானம் எந்த நேரமும் போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சந்தானம் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் சந்தானம் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் சந்தானம் நடித்து வரும் சக்க போடு போடு ராஜா' டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
 

More News

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்

மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே தினத்தில் சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ஒருசில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விஷால் அதிரடி அறிவிப்பு எதிரொலி: திரையரங்க உரிமையாளர்கள் அவசர கூட்டம்

திரையரங்கு கட்டண உயர்வு, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவை காரணமாக திரைப்படம் பார்க்க வரும் பாமர ரசிகர்கள் ஒரு படம் பார்க்க நபர் ஒன்றுக்கு ரூ.300க்கும் மேல் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

'மெர்சல்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

தளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு தடையாக தகர்க்கப்பட்டு வருகிறது

'மெர்சல்' ரிலீஸ் குறித்து விஷால் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் சற்றுமுன்னர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி: அடுக்கடுக்கான தடைகளை தகர்க்கும் 'மெர்சல்'

கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சனைகளை சந்திக்காமல் விஜய் படம் வெளியானது இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மெர்சல் படத்திற்கு 'டைட்டில் பிரச்சனை உள்பட பலவேறு தடைகள் ஏற்பட்டு