சந்தானம் நடிக்கும் முதல் மும்மொழி திரைப்படம்: நாயகி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 26 2022]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்கள் தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் நடிகர் சந்தானம் முதல் முதலாக மும்மொழி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் காமெடி நடிகராக இருந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ’ஏஜண்ட் கண்ணாயிரம்’ மற்றும் ’குலுகுலு’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் மும்மொழி திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருண் விஜய் நடித்த ’தடம்’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தாராள பிரபு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சந்தானம் இதுவரை நடித்திராத புதிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த் ராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ராகினி திவேதி நடிக்க இருப்பதாகவும் அதைத்தவிர பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாங்காக், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

More News

சென்னை காவல்துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவி: குவியும் வாழ்த்துக்கள்

சென்னை காவல் துறைக்கு சூர்யா செய்த மகத்தான உதவியை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'நம்ம பிக்பாஸ் மதுவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .

 காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது: பிரபல இயக்குனர் அதிர்ச்சிதகவல்

பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது என பிரபல இயக்குநர் உறுதி செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

பீஸ்ட்' குழுவினர்களுக்கு விஜய் வைத்த பார்ட்டி: வைரல் புகைப்படம்

 தளபதி விஜய் நடித்த பீஸ்ட்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பதும், இந்த படம் வசூல் அளவில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம்

கமல்-சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது கமல்ஹாசனின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ