சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான சந்தானம் சமீபத்தில் ஹீரோவாக பதவியுயர்வு பெற்று தற்போது ஹீரோவாக மட்டுமே ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடித்து முடித்துள்ள 'தில்லுக்கு துட்டு' படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் பின்னணி இசைப்பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஒருசில பணிகள் முடிந்தவுடன் இந்த படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படம் வரும் 24ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே நாளில்தான் தனுஷின் 'அம்மா கணக்கு' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், ஷனன்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'லொள்ளுசபா' ராம்பாலா இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

More News

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரெமோ ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் டிராக் குறித்த தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் ரிலீஸ் தேதி 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.,

'தனுஷின்' 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதியில் மாற்றம்

தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது...

விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' டிராக் லிஸ்ட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது.