close
Choose your channels

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' ரிலீஸ் தேதி

Monday, May 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது நாயகன் வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நாயகனாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது ஓரிரு படங்களில் நாயகனாக நடித்து வருகிறது. அவற்றில் ஒரு படம்தான் 'தில்லுக்கு துட்டு'
லொள்ளுசபா ராம்பாலா இயக்கதில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம், ஷனன்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஜூன் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment