அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள சந்தானம் படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 23 2016]

சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்த 'வாலிப ராஜா' திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அவர் நடித்து வந்த மற்றொரு திரைப்படமான 'தில்லுக்கு துட்டு' என்ற படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

திகில் மற்றும் காமெடி ஆகியவை சரியான அளவில் கலந்து உருவாகியிருக்கும் 'தில்லுக்கு துட்டு' படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். சந்தானம், ஷனன்யா, சவுரப் சுக்லா, ஆனந்த்ராஜ், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்' என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஏப்ரலில் சுந்தர் சியின் இரண்டு படங்கள் ரிலீஸ்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2' என்ற பேய்ப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஏப்ரல் மாதம் அவர் தயாரித்த ஒரு படமும்...

'2.0' படப்பிடிப்பு முடிவது எப்போது?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக டெல்லி ஜவஹர்லால்...

விஜய்-சூர்யா-சிம்புவுடன் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

வரும் மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வருவதால் ஏப்ரல் மாதமே பெருவாரியான திரைப்படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் திரையுலகினர்...

விஜய்யின் 'தெறி' மலையாள படமா?

இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தின் பாடல்களும், டிரைலர்களும் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்...

விஷால் செய்த உயிர்காக்கும் உதவி

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் மூலமும், தனது சொந்த பணத்திலும் பல உதவிகள் செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்...