ரசிகர்களுக்கு சந்தானம் தரும் இரட்டை விருந்து

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ள சந்தானம் 'தில்லுக்கு துட்டு', 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஜூன் 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி நாளை இந்த படத்தின் அட்டகாசமான டிரைலர் ஒன்றும் ரிலீஸ் ஆகவுள்ளது. டிரைலர் மற்றும் பாடல்கள் என ரசிகர்களுக்கு சந்தானம் இரட்டை விருந்து தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திகில் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தானம், ஷான்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராம்பாலா இயக்கியுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.