சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு'. 4 நாட்கள் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,July 11 2016]

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்த இரண்டு படங்கள் கொடுத்த வெற்றியின் காரணமாக இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்க முடிவெடுத்து அவர் நடித்த படம் 'தில்லுக்கு துட்டு'
முதல்முறையாக திகில் படம் ஒன்றில் நாயகனாக சந்தானம் நடித்த இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரம்ஜான் விடுமுறை தினத்துடன் இணைந்த நான்கு நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.13.5 கோடி வசூல் செய்துள்ளது. இது சந்தானம் நடித்த படங்களில் அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சென்னையில் ரூ.1.37 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.5 கோடியும், கோவையில் ரூ.2.7 கோடியும் வசூல் செய்துள்ளது. சந்தானம், ஷனன்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'லொள்ளுசபா' ராம்பாலா இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

More News

தமிழக முதல்வருடன் சரத்குமார் - ராதிகா சந்திப்பு

முன்னாள் நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா...

ஜனனி ஐயருக்கு கிடைத்த 'மலர்' கேரக்டர்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' படம் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது சாய்பல்லவி நடித்த மலர் கேரக்டர்தான்....

ஜெய்-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ஐந்து வருடங்களுக்கு பின்னர் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது என்றும் ஜெய், அஞ்சலி...

விஜய் 60: இளையதளபதிக்கு எத்தனை வேடம்?

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது...

விஜய் 60 : இளையதளபதிக்கு எத்தனை வேடம்?

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'விஜய் 60' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. கீர்த்தி சுரேஷ்...