நடிகை ஆஸ்னா ஜாவேரியுடன் திருப்பதியில் திருமணமா? சந்தானம் மறுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', இனிமே இப்படித்தான் படங்களில் ஜோடியாக நடித்த சந்தானம் மற்றும் ஆஸ்னா ஜாவேரி ஆகிய இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முன்னர் திருப்பதி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் உடைய சந்தானம் திருப்பதிக்கு தனது குடும்பத்தினர்களுடன் இன்று சென்றுள்ளார். அதே நேரத்தில் தனது பெற்றோருடன் திருப்பதி வந்த நடிகை ஆஸ்னா ஜாவேரி, தற்செயலாக சந்தானத்தை பார்த்து பேசியதாகவும், இதை பார்த்த ஒருசிலர், இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து சந்தானம் தனது மறுப்பை தெரிவித்துள்ளார். இருவரும் தற்செயலாக திருப்பதியில் சந்தித்ததாகவும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தானம் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திருமணமானவர் என்பது பலருக்கு தெரியும். அப்படியிருந்தும் இதுபோல் வதந்தியை கிளப்பிவிட்டு அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் விளையாடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஒரு நடிகரின் நடிப்பை மட்டுமே விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு உரிமை உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு அவர்களுடைய குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்தியை கிளப்பிவிடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com