close
Choose your channels

சந்தானத்துடன் மீண்டும் கைகோர்க்கும் உதயநிதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி நடித்த ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் சந்தானம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இருவரும் சேர்ந்த காமெடி காட்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரது படத்தின் ரிலீஸ் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ’குலுகுலு’ இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கே பாக்யராஜ், மனோபாலா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது சந்தானம் படத்தையும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment