சந்தானம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த ‘டகால்டி’ திரைப்படம் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றை இயக்குனர் கண்ணன் இயக்கி வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இவர் ஏற்கனவே 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை' போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பதும் இந்த படங்களில் சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் டைட்டில் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் மார்ச் மாதம் அதாவது அடுத்த மாதம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Title announcement tomorrow for my project with our scintillating star @iamsanthanam 's next with Title Look to be revealed 06.02.2020 at 7:00 PM
— kannan (@Dir_kannanR) February 5, 2020
Guess what's going to be the wacky one March 2020 Relse@masalapixweb @mkrpproductions @shammysaga @tridentartsoffl @johnsoncinepro pic.twitter.com/x5cmydqENM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments