சந்தானத்திற்கு தோளுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,August 04 2022]

சமீபத்தில் நடிகர் சந்தானம் தனது மகனுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் சந்தானத்தின் தோளுக்கு மேல் வளர்ந்து உள்ள நிலையில் சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்

சமீபத்தில் நடிகர் சந்தானம் புதுச்சேரி செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கருவடிகுப்பம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலுக்கு சென்றார். அங்கு சந்தானத்தை அவரது ரசிகர்கள் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோயில் குருக்கள் சந்தானத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்

இந்த கோயிலின் சிறப்பை கேட்டறிந்த சந்தானம் இனி அடிக்கடி கண்டிப்பாக இந்த கோவிலுக்கு வருவேன் என்று உறுதி அளித்தார். சித்தானந்தர் என்ற சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்த நிலையில் அந்த சமாதி மீது சிவலிங்கம் அமைத்து வழிபாடு நடைபெறுகிறது என்பதையும் இந்த கோவிலின் வரலாற்றை சந்தானம் கேட்டு தெரிந்து கொண்டார்

மேலும் மகாகவி பாரதியார் புதுவையில் தங்கியிருந்த போது இந்த கோவிலுக்கு அடிக்கடி வந்து தான் கவிதை எழுதுவார் என்ற வரலாறும் உண்டு. அவருடைய நினைவாக கோயில் வளாகத்தில் பாரதியாரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வருபவர்கள் பாரதியாரின் சிலையையும் வழிபட்டு புகைப்படம் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த கோயிலுக்கு வந்த சந்தானமும் பாரதியார் சிலையை வழிபட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்

இந்த நிலையில் சந்தானத்துடன் அவருடைய மகனும் இந்த கோவிலுக்கு வருகை தந்ததை அடுத்து இருவரும் சேர்ந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சந்தானத்தின் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட அவரது மகனை பார்த்து, சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.