சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,October 28 2016]

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு 'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த 'நல்ல நேரம்' படத்தின் பாடலின் வரிகளே இந்த படத்தின் டைட்டிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'அனேகன்' நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

More News

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டீசர் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்துள்ளது.

'சென்னை 600028 II'ரிலீஸ் தேதி. வெங்கட்பிரபு அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II'...

நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. விவேக் விளக்கம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம்...

'பாகுபலி' சிவகாமி கேரக்டரில் ஏன் நடிக்கவில்லை. பிரபல நடிகை பேட்டி

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட திரைப்படமான 'பாகுபலி' கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது...

தனுஷூடன் நடித்த அனுபவம். 'கொடி' படம் குறித்து த்ரிஷா பேட்டி

தனுஷ், த்ரிஷா நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கிய 'கொடி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ள...