கமல் ரசிகராக சந்தானம் நடிக்கும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகராக சந்தானம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
’குலேபகாவலி’ ‘கோஸ்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ் ,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
ஜிப்ரான் இசையில், ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில், பாரதி பட தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவே காமெடியாக இருக்கும் நிலையில் படமும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்திற்கு ’80 பில்டப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Naanum #KamalHaasan Rasigar than Da!! 💪
— Studio Green (@StudioGreen2) October 23, 2023
Celebrate this festive season with high dose of laughter!
Presenting the #FirstKalaai from @iamsanthanam's #80sBuildup 😉#80sBuildupFirstKalaai😆 Out Now 🔗 https://t.co/EIZSzMrWqJ@DirKalyan @preethi_radhika @ksravikumardir… pic.twitter.com/HVy23jSfJ6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com