close
Choose your channels

மீண்டும் எம்.ராஜேஷ் படத்தில் சந்தானம். ஆனால்...

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எம்.ராஜேஷ் இயக்கிய படங்களில் சந்தானம் தவறாது காமெடி வேடங்களில் நடித்து வருவது கடந்த சில வருடங்களாக நிகழ்ந்து வருகிறது. எம்.ராஜேஷ் இயக்கிய 'சிவா மனசுல சக்தி' முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' வரை சந்தானத்தின் காமெடி முக்கியத்துவம் பெற்றது.
இந்நிலையில் தற்போது எம்.ராஜேஷ், ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை இயக்கி வருகிறார். சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டதால், அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கே காமெடி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்ததாக கூறப்பட்டது.
ஆனால் எம்.ராஜேஷின் 'கடவுள் இருக்குறாரு குமாரு' படத்தில் சந்தானம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் சந்தானம் காமெடி வேடத்தில் நடிக்கவில்லை என்றும் சிறப்புத்தோற்றத்தில் தோன்றுகிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment